செய்திகள்
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

வட கொரியா விவகாரம் பற்றி ஜி7 மாநாட்டில் பேசுவேன்: ஜப்பான் பிரதமர்

Published On 2019-08-23 11:46 GMT   |   Update On 2019-08-23 11:46 GMT
நாளை நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் வடகொரியா விவகாரத்தை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச உள்ளதாக ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
டோக்கியோ:

45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் நாளை தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா உள்பட 7 நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரான்ஸ் நாட்டுக்கு புறப்படுவதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்தார். அப்போது ஜி7 மாநாடு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. 

அதற்கு அவர் பதிலளிக்கையில்,  “ஜி 7 மாநாட்டில் உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், அந்நிய வர்த்தக சுதந்திரங்கள் பாதுகாப்பு போன்றவற்றை பற்றி விவாதிக்க உள்ளேன். அதே நேரத்தில் வடகொரியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பிரச்சனைகளைப் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனும் பேச உள்ளேன்” என கூறினார்.
Tags:    

Similar News