செய்திகள்
பாரிசில் உரையாற்றும் மோடி

வளர்ச்சிப் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது- பாரிசில் மோடி பேச்சு

Published On 2019-08-23 09:56 GMT   |   Update On 2019-08-23 09:56 GMT
வளர்ச்சிப்பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது என்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்தியர்களிடையே மோடி பேசினார்.
பாரிஸ்:

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர்.

ஊழல், மக்கள் பணத்தை கொள்ளையடித்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இதற்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.



மக்களுக்கு செய்ய முடியாத பல நலத்திட்டங்களை கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றி உள்ளோம். மத்தியில் புதிய அரசு பதவியேற்ற 75 நாட்களில் துணிச்சலான பல முடிவுகளை எடுத்தது.

வளர்ச்சிப்பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது. 2030 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காலநிலை மாற்ற இலக்குகளில் பெரும்பாலானவற்றை அடுத்த ஆண்டு ஒன்றரை ஆண்டுகளில் இந்தியா அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News