செய்திகள்
போகோ ஹராம் பயங்கரவாதிகள்

கேமரூனில் துணிகரம் - பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்

Published On 2019-08-22 12:46 GMT   |   Update On 2019-08-22 12:46 GMT
கேமரூன் நாட்டில் பஸ் ஓட்டுநரை கொலை செய்து அதில் பயணம் செய்த 7 பேரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்தி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வுன்டி:

ஆப்பிரிக்க நாடுகளில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பொதுமக்கள் மீது அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. 

இந்நிலையில், மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கமரூனின் தெற்கு பகுதியில் உள்ள டபன்கோ என்ற இடத்தில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 19 பேர் பயணித்து கொண்டிருந்தனர்.

 அப்போது அந்த பஸ்சை வழி மறித்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஒட்டுநரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 18 பேரை பிணை கைதிகளாக வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பயங்கரவாதிகள் பிடியில் இருந்த 11 பேரை மீட்டனர்.

ஆனாலும், பஸ் பயணிகள் 7 பேரை போகோ ஹராம் பயங்கரவாதிகள் பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். இதையடுத்து கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News