செய்திகள்
மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ

மூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’

Published On 2019-08-21 19:51 GMT   |   Update On 2019-08-21 19:51 GMT
உலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
பீஜிங்:

சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ‘ரோபோ’ மாநாடு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக ‘ரோபோ’ மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது.

“ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உளவு, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழிற்துறைகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.



அவற்றில், மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ, ஆபத்து காலங்களில் உதவும் தன்மை கொண்ட நாய் ரோபோ, பியானோ வாசிக்கும் ரோபோ, பார்களில் மது வினியோகிக்கும் ரோபோ, குழந்தைகளிடம் தோழமை பாராட்டி விளையாடும் ரோபோ, அரை கிலோ எடையுடன் 20 நிமிடங்கள் பறக்கக் கூடிய பறவை ரோபோ, நீரில் நீந்தும் மீன் ரோபோ உள்ளிட்டவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 
Tags:    

Similar News