செய்திகள்
ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா

ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா மரணம்

Published On 2019-08-17 18:47 GMT   |   Update On 2019-08-17 18:47 GMT
‘ஈஸி ரைடர்’ படம் மூலம் பிரபலமான பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார்.
வாஷிங்டன்:

பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா. இவர் ‘ஈஸி ரைடர்’ படம் மூலம் பிரபலமானவர்.  டென்னிஸ் ஹாப்பர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தை தயாரித்தவரும் பீட்டர் பாண்டாதான். இவரது தந்தை ஹென்றி பாண்டாவும் ஹாலிவுட் நடிகராக திகழ்ந்தவர் ஆவார்.

சிறிது காலமாக நுரையீரல் புற்றுநோயால் பீட்டர் பாண்டா அவதியுற்று வந்தார். இந்த நிலையில் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

இது தொடர்பாக அவரது மூத்த சகோதரி ஜேன் பாண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் மிகுந்த துக்கத்தில் உள்ளேன். என் இனிய இளைய சகோதரர் மரணம் அடைந்து விட்டார். இந்த கடைசி நாட்களை நான் அவரோடு கழித்து வந்தேன். அவர் சிரித்தவாறே போய் விட்டார்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News