செய்திகள்
சோளக்காட்டில் தரையிறங்கிய விமானம்

மிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி

Published On 2019-08-15 11:41 GMT   |   Update On 2019-08-15 12:07 GMT
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜீன்கள் பழுதானதால் சாமர்த்தியமாக அருகில் உள்ள காட்டில் தரையிறக்கி 226 உயிர்களை காப்பாற்றியுள்ளார் விமானி.
ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோலுக்கு யூரல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று விமானம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் இரண்டு என்ஜீன்களும் பழுதானது. அத்துடன் லேண்டிங் கியரும் வேலை செய்யவில்லை.



உடனடியாக விமான ஊழியர்கள் விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று கூறினர். இதனால் எதையும் பற்றி யோசிக்காமல் விமானி மக்காச்சோளம் காட்டில் அவசரமாக தரையிறக்கினார்.



தரையிறக்கும்போது 9 குழந்தைகள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. விமானியின் துணிச்சலான முடிவால் 226 பயணிகள் உயிர்தப்பினர். இது ஒரு மிரக்கிள் எமர்ஜென்சி லேண்டிங் என விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Tags:    

Similar News