செய்திகள்
ரஷ்யாவுடன் நட்புறவு சிறந்த நிலையில் உள்ளது - சீன மந்திரி தகவல்

ரஷ்யாவுடன் நட்புறவு சிறந்த நிலையில் உள்ளது - சீன மந்திரி தகவல்

Published On 2019-08-14 06:12 GMT   |   Update On 2019-08-14 06:12 GMT
ரஷ்யா-சீனா இடையேயான நட்புறவு இதுவரை இல்லாத அளவில் தற்போது மிகச்சிறப்பாக உள்ளது என சீனாவின் கலாச்சாரத் துறை துணை மந்திரி ஷாங் சு தெரிவித்துள்ளார்.
விளாடிவோஸ்டோக் :


சுற்றுலாத்துறையில் ரஷ்யா-சீனா இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீனாவின் கலாச்சாரத்துறை துணை மந்திரி ஷாங் சு பங்கேற்றார். அவர்  பேசுகையில், ‘ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளுமே தற்போது நல்ல தலைவர்களை பெற்றுள்ளது. ரஷ்யா-சீனா உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. முன்பு இருந்ததை விட தற்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளது” என்றார். 

2019-ம் ஆண்டுடன் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கும் பீஜிங்கிற்குமான தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் ஆகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
     
Tags:    

Similar News