செய்திகள்
விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து சடலங்களை மீட்கும் காட்சி

கலிபோர்னியாவில் விமான விபத்து- 2 பேர் உயிரிழப்பு

Published On 2019-08-08 07:46 GMT   |   Update On 2019-08-08 07:46 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறு ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் கமரில்லோ விமான நிலையம் நோக்கி நேற்று மதியம் சிறு ரக விமானம் ஒன்று வந்தது. தரையிறங்க முயற்சிக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து விமான ஓடுபாதையின் அருகில் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய சாலை பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News