செய்திகள்
ஹர்ஷவர்தன் சிரிங்லா

காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரம் பிற நாடுகளுடனான உறவை பாதிக்காது - இந்திய தூதர் உறுதி

Published On 2019-08-08 02:51 GMT   |   Update On 2019-08-08 02:51 GMT
காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரம் பிற நாடுகளுடனான உறவை பாதிக்காது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிரிங்லா கூறினார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷவர்தன் சிரிங்லா வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு அவர் கூறியதாவது:-

காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட பிரச்சினை, இந்தியாவின் உள் விவகாரம். நல்ல நிர்வாகத்தை நோக்கமாக கொண்ட நிர்வாக ரீதியான முடிவு. இதன் காரணமாக, எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கோ, சர்வதேச எல்லைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. பிற நாடுகளுடனான உறவிலும் பாதிப்பு ஏற்படாது.

இந்தியாவின் பிறபகுதி மக்களுக்கு கிடைத்து வரும் சமூக, பொருளாதார திட்டங்களின் பலன்கள், காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News