செய்திகள்
பாகிஸ்தானில் போராட்டம் நடத்தும் எதிர்ப்பாளர்கள்

காஷ்மீர் விவகாரம்: இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

Published On 2019-08-06 05:28 GMT   |   Update On 2019-08-06 05:28 GMT
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்திய தூதரை நேரில் அழைத்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது.
இஸ்லாமாபாத்:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று திரும்ப பெற்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியாவுக்கு நேற்று அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் சொகைல் முகமது நேரில் வர சம்மன் அனுப்பினார்.

அதன்படி இந்திய தூதர் அஜய் பிசாரியா வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு சென்றார். அப்போது அவரிடம், காஷ்மீர் தொடர்பாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்ட விரோதமானது. அவற்றை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. இந்த நடவடிக்கை அனைத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்களுக்கு எதிரானது என தெரிவித்தார்.

இதேபோல, காஷ்மீரில் படைகள் குவிப்பு, தலைவர்கள் கைது, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட செயல்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News