செய்திகள்
ஈரான் முன்னர் சிறைபிடித்த கப்பல் (கோப்பு படம்)

7 லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடத்த முயற்சி - வெளிநாட்டு கப்பலை சிறைபிடித்தது ஈரான்

Published On 2019-08-04 13:03 GMT   |   Update On 2019-08-04 13:03 GMT
7 லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடத்த முயற்சித்ததாக மேலும் ஒரு வெளிநாட்டு கப்பலை ஈரான் கடற்படை இன்று சிறைபிடித்துள்ளது.
டெஹ்ரான்:

7 லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடத்த முயற்சித்ததாக மேலும் ஒரு வெளிநாட்டு கப்பலை ஈரான் கடற்படை இன்று சிறைபிடித்துள்ளது.

ஈரான் நாட்டின் கடல் பகுதி வழியாக சரியான ஆவணங்கள் இன்றி செல்லும் சரக்கு கப்பல்களை அந்நாட்டு கடற்படையினர் அடுத்தடுத்து சிறைபிடித்து வருகின்றனர்.



கடந்த மாதத்தில் மட்டும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் சரக்கு கப்பல் மற்றும் பத்து லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடத்தியதாக மற்றொரு சரக்கு கப்பலும் சிறைபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், ஃபார்சி தீவை ஒட்டியுள்ள கடல்பகுதி வழியாக 7 லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடத்த முயற்சித்ததாக மேலும் ஒரு வெளிநாட்டு கப்பலை ஈரான் கடற்படையினர் இன்று சிறைபிடித்துள்ளனர்.

பிடிபட்ட கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது? என்பது தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் அந்த கப்பல் புஷெஹர் மாகாணத்தில் உள்ள கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதில் இருந்த கச்சா எண்ணெய் ஈரான் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் சேர்க்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags:    

Similar News