செய்திகள்
அதிபர் டிரம்ப்

வால்மார்ட் துப்பாக்கிச்சூடு கோழைத்தனமான செயல் - அதிபர் டிரம்ப் கண்டனம்

Published On 2019-08-04 03:46 GMT   |   Update On 2019-08-04 03:46 GMT
அமெரிக்காவின் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கோழைத்தனமான செயல் என அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் டெல்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். அப்போது ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.

இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர். மேலும் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கோழைத்தனமான செயல் என அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு துயரமானது. இது மிகவும் கோழைத்தனமான செயல் என பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News