செய்திகள்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

காஷ்மீர் பயணத்தை தவிருங்கள்: பிரிட்டன், ஜெர்மெனி அரசு அந்நாட்டு மக்களுக்கு உத்தரவு

Published On 2019-08-03 13:33 GMT   |   Update On 2019-08-03 14:51 GMT
இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள பிரிட்டன், ஜெர்மெனி மக்கள் காஷ்மீர் பயணத்தை தவிர்க வேண்டும் என அந்நாட்டு அரசுகள் உத்தரவிட்டுள்ளது.
லண்டன்:   
 
இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறையிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ குவிப்பு மாநில சிறப்பு சட்டத்தை ரத்துசெய்ய ஏற்படுத்தப்படும் முயற்சி என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் , யாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் திரும்பிச் செல்லுமாறு மாநில உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு யாரும் சுற்றுலா செல்லவேண்டாம் என்றும் ஜம்மு-காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாரும் பிரிட்டன் அரசு உத்தரவிட்டிருந்தது. இங்கிலாந்து நாட்டின் உத்தரவையடுத்து ஜெர்மெனி அரசும் அந்நாட்டு மக்களுக்கு அதே உத்தரவை பிறப்பித்துள்ளது.  

Tags:    

Similar News