செய்திகள்
பாஷா முகர்ஜி

இங்கிலாந்தில் அழகி பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண் டாக்டர்

Published On 2019-08-03 06:05 GMT   |   Update On 2019-08-03 06:05 GMT
கிழக்கு மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள டெர்பி நகரில் நடைபெற்ற ‘மிஸ் இங்கிலாந்து’ அழகிப்போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் பாஷா முகர்ஜி அழகி பட்டம் வென்றுள்ளார்.
லண்டன்:

‘மிஸ் இங்கிலாந்து’ அழகிப்போட்டி கிழக்கு மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள டெர்பி நகரில் நடைபெற்றது. அதில் பாஷாமுகர்ஜி (23) உள்ளிட்ட பல பெண்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் பல சுற்றுகளாக நடைபெற்றன.

இறுதி சுற்று போட்டியில் பாஷா முகர்ஜி ‘மிஸ் இங்கிலாந்து’ அழகி பட்டம் வென்றார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். டாக்டரான இவர் பாஸ்டனில் உள்ள பில்கிரிம் ஆஸ்பத்திரியில் பணிபுரிகிறார்.

இவருக்கு ஆங்கிலம், வங்காளம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் உள்பட 5 மொழிகள் பேச தெரியும். இவர் தனது 9-வது வயதில் குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் குடிபுகுந்தார். நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பாடப்பிரிவில் பட்டம் பெற்றார்.

இங்கிலாந்தில் மைனாரிட்டியாக வாழும் ஆசிய சமூகத்தில் இருந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார்.



Tags:    

Similar News