செய்திகள்
ஜெய்சங்கர்- மைக் பாம்பியோ

காஷ்மீர் பிரச்சனைக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் - வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

Published On 2019-08-02 05:56 GMT   |   Update On 2019-08-02 05:56 GMT
காஷ்மீர் பிரச்சனையில் இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து: 

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ, இந்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட பல்வேறு நாட்டு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனைக்கு இருநாட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படும் என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனைக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றார்.

மோடியும், இம்ரான்கானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்த நிலையில் ஜெய்சங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News