செய்திகள்
குண்டு வெடிப்பில் சேதம் அடைந்த கட்டிடம்.

ஆப்கானிஸ்தானில் துணை அதிபர் வேட்பாளர் அலுவலகத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 20 பேர் பலி

Published On 2019-07-29 14:20 GMT   |   Update On 2019-07-29 14:20 GMT
ஆப்கானிஸ்தானில் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர் அலுவலகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தீடீர் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டுவரும் தலிபான், ஐ.எஸ் போன்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது. அவர்களை ஓடுக்க உள்நாட்டு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளும் பதில் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதற்கிடையில், அந்நாட்டில் வரும் செப்டம்பர் 28-ம் நாள் அதிபர் பதவி மற்றும் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அம்ருல்லா சாலே துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.  

இந்நிலையில் நேற்று அவர் தனது கட்சி அலுவலகத்தில் இருந்த போது வெடிகுண்டு நிரப்பிய காருடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் அதை வெடிக்க செய்தனர். பின்னர் அம்ருல்லா சாலே இருந்த கட்சி அலுவலகம் மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கோடூர தாக்குதலில் 16 அப்பாவி பொதுமக்கள் உட்பட மொத்தம் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.

ஆனால் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை அதிபர் வேட்பாளர் அம்ருல்லா அதிஷ்ரவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதல் தொடர்பாக எந்த பயங்கரவாத அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News