செய்திகள்
அதி நவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்

இந்திய விமானப்படையில் இணைந்தது அதிநவீன தாக்குதல் ஹெலிகாப்டர் அப்பாச்சி

Published On 2019-07-27 15:46 GMT   |   Update On 2019-07-27 15:46 GMT
இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இன்று ஒப்படைத்தது.
லக்னோ:

இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமானப்படைக்கு நவீன ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அமெரிக்க நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விமானப்படைக்கு 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் தயாரித்து வழங்க போயிங் நிறுவனம் முன்வந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் தொகுப்பாக 4 அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் இந்தியாவிடம் வழங்கியது.

அமெரிக்காவில் இருந்து உத்திரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் விமானப்படை தளத்திற்கு இன்று வந்து சேர்ந்த இந்த ஹெலிகாப்டர்கள் விரைவில் விமானப்படையின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும். 

இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் மற்ற ஹெலிகாப்டர்களையும் ஒப்படைத்து விடுவோம் என போயிங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.   
Tags:    

Similar News