செய்திகள்
நிலநடுக்க அளவை காட்டும் கருவி

ஜப்பானில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

Published On 2019-07-25 02:27 GMT   |   Update On 2019-07-25 02:27 GMT
ஜப்பான் நாட்டில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் சிபா பகுதியில் இன்று  காலை உள்ளூர் நேரப்படி 7.14 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவானது என புவியியல் ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.

சிபா பகுதியில் உள்ள 3 இடங்களில் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News