செய்திகள்
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிய காட்சி

மீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா

Published On 2019-07-23 22:31 GMT   |   Update On 2019-07-23 22:31 GMT
மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் வெனிசூலா மீண்டும் இருளில் மூழ்கியது.
காரக்கஸ்

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. மேலும் அங்கு பொருளாதார நெருக்கடியும் நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனமான மின்சார நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடும் இன்னலை அனுபவித்து வருகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் 22 மாகாணங்களில் சுமார் ஒருவாரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதும், மக்கள் கடும் அவதிக்குள்ளானதும் நினைவுகூரத்தக்கது.

Tags:    

Similar News