செய்திகள்
பில்கேட்ஸ்

உலக பணக்காரர்கள் பட்டியல்: பின்னுக்கு இறங்கிய பில்கேட்ஸ்

Published On 2019-07-18 07:50 GMT   |   Update On 2019-07-18 07:50 GMT
உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த பில்கேட்ஸ், தனது இடத்தில் இருந்து இறங்கியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்தவர் பில்கேட்ஸ்.

உலகில் பலரும் பேசும்போது, ஒருவரை டார்கெட் செய்ய வேண்டும் என்றால்,  ‘நீ என்ன பெரிய பில்கேட்சா?’ எனும் கேள்வி பொதுவாக கேட்கப்படுவதும் உண்டு. அப்படி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட பில்கேட்சை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளினார்.



இப்போது பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் எல்விஎச்எம் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இந்த ஆண்டுதான் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.



புளூபெர்க் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி,

1. ஜெப் பெசோஸ் - 125 பில்லியன் டாலர்
2. பெர்னார்ட் அர்னால்ட் - 108 பில்லியன் டாலர்
3. பில்கேட்ஸ் -107 பில்லியன் டாலர்

ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.


Tags:    

Similar News