செய்திகள்
கடத்தல் மன்னன் எல் சாப்போ

அமெரிக்க போலீசுக்குக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடத்தல் மன்னனுக்கு ஆயுள் சிறை

Published On 2019-07-18 04:17 GMT   |   Update On 2019-07-18 04:17 GMT
அமெரிக்க காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மெக்சிகோ கடத்தல் மன்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாஷிங்டன்:

மெக்சிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ (வயது 62). மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதை மருந்து சாம்ராஜியம் நடத்தி வந்த இவர், அமெரிக்காவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 

இவர் மீது அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கடத்தி சப்ளை செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், இவர் அமெரிக்க போலீசில் சிக்காமல் தொடர்ந்து தனது கடத்தல் தொழிலை தொடர்ந்தார்.

இதற்கிடையே மெக்சிகோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாப்போ, 2015ம் ஆண்டு மெக்சிகோ சிறையிலிருந்து தப்பினார். பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்ட அவர், 2017ம் ஆண்டு அமெரிக்காவுக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார்.

அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் சாப்போ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையுடன், 30 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News