செய்திகள்
பிரான்சில் ராணுவ வீரர் ‘பிளைபோர்ட்’ என்ற ஜெட் பவர் எந்திரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்ட காட்சி

பிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்

Published On 2019-07-16 18:36 GMT   |   Update On 2019-07-16 18:36 GMT
பிரான்சில் ராணுவ வீரரான பிரான்கி ஜபாதா என்பவர் தானே தயாரித்த ‘பிளைபோர்ட்’ என்ற ஜெட் பவர் எந்திரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார்.
பாரீஸ்:

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரீசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு விசித்திரமான காட்சி ஒன்று அரங்கேறியது.



சிறிய ஜெட் எந்திரத்தில் நின்றபடி கருப்பு நிற உடையணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் அந்தரத்தில் பறந்து வட்டமடித்தார். ராணுவ வீரரான பிரான்கி ஜபாதா என்பவர் தானே தயாரித்த ‘பிளைபோர்ட்’ என்ற ஜெட் பவர் எந்திரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார். இது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தாங்கள் பார்ப்பது கனவா, நிஜமா என்று புரியாமல் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

பலர் ஆர்வத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அதிபர் மெக்ரான் இது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, நவீனம் மற்றும் புதுமையான தங்களது ராணுவத்தால் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News