செய்திகள்
நிலநடுக்கத்தால் சேதமடைந்த ஓட்டல் நுழைவு வாயில்

பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் சேதம்

Published On 2019-07-16 05:04 GMT   |   Update On 2019-07-16 05:04 GMT
இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது.
மாஸ்கோ:

பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. இங்கு அதிக அளவிலான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு பெருமளவிலான சேதம் ஏற்படுகிறது. 

இந்நிலையில், இன்று அதிகாலைடியல் பாலி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்காரில் இருந்து 29 மைல் தொலைவில் கடலுக்கடிளில் 63 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகாக பதிவாகியிருந்தது. 



நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து வெளியேறினர். ஒருசில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. 

லம்பாக், கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. 
Tags:    

Similar News