செய்திகள்
வான்வழி விமானப்பயணம்

இந்தியாவுக்கான வான்வழியை திறந்தது பாகிஸ்தான்

Published On 2019-07-16 03:01 GMT   |   Update On 2019-07-16 08:09 GMT
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வழியாக பறக்கும் வகையில் பாகிஸ்தான் தனது வான்வழியை திறந்துள்ளது.
இஸ்லாமாபாத்:

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது.



கிரிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றபோது, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இயலாத காரணத்தால் மாற்று வழியைத் தேர்வு செய்ய நேர்ந்தது.

இந்நிலையில், கர்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே  உடன்பாடு ஏற்பட்டிருந்த சூழலில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது.

இந்த வான்வழி நள்ளிரவு 12.41 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியில் விரைவில் பறக்கத்தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.





Tags:    

Similar News