செய்திகள்
நடுவானில் தடுமாறிய விமானம்

பறக்கும்போது தடுமாறிய விமானம் -நிலை குலைந்த விமானிகள்

Published On 2019-07-12 08:58 GMT   |   Update On 2019-07-12 08:58 GMT
நடுவானில் கனடா விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது தடுமாறியதில் 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
ஒட்டாவா:

கனடாவின் வான்குவரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 269 பயணிகளும், 15 விமான ஊழியர்களும் இருந்தனர்.

விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் கழித்து ஹவாய் தீவுக்கு மேலே 36 ஆயிரம் அடிக்கும் மேலாக பறந்துக் கொண்டிருந்தது. அப்போது வானின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கவே,  திடீரென விமானம் குலுங்கியது. இதனால் பயணிகள் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.

விமானம் வேகமாக குலுங்கியதால் சிலர் முன் இருக்கையின்மீதும், மேல் பகுதியிலும் மோதினர். பின்னர் விமான ஊழியர் ஒருவர், ஹவாயின் ஹோனாலு சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தரை இறக்க அனுமதி கேட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் பயணம் செய்த 37 காயமடைந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.  பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.





Tags:    

Similar News