செய்திகள்
ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி

ஜி 20 மாநாடு - இரண்டாவது நாளில் உலக தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Published On 2019-06-28 17:41 GMT   |   Update On 2019-06-28 17:41 GMT
ஒசாகா நகரில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஒசாகா:

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் இன்று தொடங்கிய ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடியின் நாளைய நிகழ்ச்சிகளின் விவரங்கள் பின்வருமாறு:

காலை 9 மணிக்கு இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடாடோவையும், காலை 9.20 மணிக்கு பிரேசில் அதிபர் ஜேர் பொல்சோனரோவையும் சந்திக்கிறார்.

காலை 9.40 மணிக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

காலை 10 மணிக்கு ஏற்றத்தாழ்வுகள் அடங்கிய நிலையான உலகம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

காலை 11.15 மணிக்கு இத்தாலி பிரதமர் கியூசெப்பி கான்டேவை சந்திக்கிறார்.

முற்பகல் 11.35 மணிக்கு துருக்கி அதிபர் தய்யீப் எர்டோகனுடன் சந்திப்பு.

முற்பகல் 11.55 மணிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் மற்றும் சிலி அதிபர் செபாஸ்டியன் பினெரா ஆகியோருடன் சந்திக்கிறார்

மதியம் 12.15 மணிக்கு மதிய உணவுடன்பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் குறித்து ஆலோசனை

மதியம் 1.15 மணிக்கு ஆலோசனை நிறைவு.

மதியம் 2.35 மணிக்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசனுடன் சந்திப்பு.

மாலை 4 மணிக்கு டெல்லிக்கு புறப்படல் என அவரது பயண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News