செய்திகள்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான் சென்றடைந்தார்

Published On 2019-06-27 10:50 GMT   |   Update On 2019-06-27 10:50 GMT
ஒசாகா நகரில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஜப்பான் சென்றடைந்தார்
வாஷிங்டன்:

ஜி-20 என அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தனி விமானம் மூலம் இன்று ஜப்பான் சென்றடைந்தார்.



ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

சீனாவுடன் வர்த்தக போர் நடைபெற்று வரும் நிலையில், அதிபர் டிரம்ப் ஜப்பான் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News