செய்திகள்

3 மாதங்களுக்கு இலவச விசா வழங்க ஐக்கிய அரபு நாடுகள் முடிவு?

Published On 2019-06-21 13:18 GMT   |   Update On 2019-06-21 13:18 GMT
கோடைக்கால சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு வரும் வெளிநாட்டவர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
துபாய்:

வெளிநாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு 14 நாட்களுக்கான விசா கட்டணமாக நபர் ஒன்றுக்கு 497 திர்ஹம்களும் (சுமார் 9,420 ரூபாய்) ஒரு மாதத்துக்கு 917 திர்ஹம்களும் (சுமார்17,381 ரூபாய்) வசூலிக்கப்படுகிறது. 

இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் இந்த ஆண்டின் கோடைக்காலம் முதல் இனி வரும் அனைத்து ஆண்டுகளிலும் சுற்றுலா வரும் வெளிநாட்டினருடன் வரும் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி விசா வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசு தீர்மானித்தது.

அவ்வகையில், ஜூலை மாதம் 15-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதிவரை ஆண்டுதோறும் நடைமுறையில் இருக்கும் இந்த சலுகையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பிரபல பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News