செய்திகள்

யானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம்

Published On 2019-06-21 03:54 GMT   |   Update On 2019-06-21 03:54 GMT
ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் சடலங்களை தின்றதால் 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
கபோரோன்:

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை 500க்கும் மேற்பட்ட கழுகுகள் உண்டன.

இதில் 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன. பொதுவாக கழுகுகள் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் சடலங்களை உண்பது வழக்கம். ஆனால், இந்த யானைகளின் சடலங்களை தின்ற கழுகுகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.



இதற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வேட்டையாடப்பட்ட மூன்று யானைகளின் சடலங்களில் நச்சுத்தன்மை கலந்துள்ளது. இதனை உண்ட கழுகுகள் உயிரிழந்தன’ என கூறியுள்ளார்.

இறந்த கழுகுகளுள் 468 கழுகுகள் வெள்ளை நிறம் கொண்ட கழுகுகள் ஆகும்.  இந்த கழுகுகள் மிக மோசமான, ஆபத்து ஏற்படுத்தும் பறவை இனங்களில் ஒன்றாக சர்வதேச  இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் பட்டியலில் இடம் பெற்றதாகும்.

மேலும் இவற்றுள் 2 கழுகுகள்  ‘டவினி’ எனப்படும் அரிய வகை கழுகுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இறந்த யானைகளின் சடலங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த கழுகுகள் எந்த இடத்தில் உள்ளன? யானைகளின் சடலங்களில் நச்சுத்தன்மைக்கான காரணம் என்ன? என்பது பற்றிய விரிவான தகவல்கள் குறித்து வனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  



Tags:    

Similar News