செய்திகள்

20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

Published On 2019-06-18 03:39 GMT   |   Update On 2019-06-18 03:39 GMT
ஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. என்ன என்பதை பார்ப்போம்.
ஹாங்காங்:

சீனாவின் ஆதரவுப் பெற்ற ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம். இவர் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதாவுக்கு ஆதரவளித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பதவி விலக கோரியும் தொடர்ந்து  போராட்டம் நடந்து வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று சுமார் 20 லட்சம் பேர் ஒன்றுக் கூடினர்.

போராட்டம் நடத்துவதற்கான மிகப்பெரிய பேனர்களை உயரத்தில் கட்டச் சென்றவர் கீழே விழுந்தார்.



காயமடைந்த அவரை அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யப்பட்டது. அங்கு விரைந்த ஆம்புலன்ஸ், காயமடைந்தவரை ஏற்றிக் கொண்ட பின்னர் நகரத் தொடங்கியது.

நொடிப் பொழுதில் கடல் அலை ஒதுங்கி மீண்டும் கூடுவதுப் போல்,  20 லட்சம் பேரும் ஒதுங்கி ஆம்புலன்சுக்கு வழி விட்டனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதேபோல் கடந்த புதன் கிழமை அன்று நடத்திய போராட்டத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  போட்ட குப்பைகளை மறுநாள் தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News