செய்திகள்

2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள்தொகை 27 கோடி அதிகரிக்கும்

Published On 2019-06-18 00:59 GMT   |   Update On 2019-06-18 00:59 GMT
2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வா‌ஷிங்டன்:

இந்திய மக்கள்தொகை தற்போது 137 கோடியாகவும், சீனா மக்கள்தொகை 143 கோடியாகவும் உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் சீன மக்கள்தொகையை இந்தியா முந்தி இந்த நூற்றாண்டில் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும். 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.



தற்போது 770 கோடியாக உள்ள உலக மக்கள்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 200 கோடி அதிகரித்து 970 கோடியாக இருக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் 1,100 கோடியாக மக்கள்தொகை அதிகரிக்கும். உலக மக்கள்தொகை அதிகரிப்புக்கு இந்தியா மட்டுமின்றி, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் முக்கிய காரணமாக இருக்கும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News