செய்திகள்

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே கார் குண்டுவெடிப்பு - 11 பேர் பலி

Published On 2019-06-17 00:57 GMT   |   Update On 2019-06-17 00:57 GMT
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர்.
மொகாதீசு:

சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அங்கு போலீசார், பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தலைநகர் மொகாதீசுவில் அதிபர் மாளிகைக்கு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து, போலீஸ் சோதனை சாவடி முன்பு நிறுத்தி வெடிக்க செய்தனர். குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இதனால் கரும்புகை மண்டலம் உருவானது. குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்துக்குள்ளாக மொகாதீசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் பரபரப்பான சாலையில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். 
Tags:    

Similar News