செய்திகள்

எவரெஸ்ட் சிகரம் அருகே சர்வதேச யோகா விழா - நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் அசத்தல்

Published On 2019-06-16 10:52 GMT   |   Update On 2019-06-16 10:52 GMT
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடல்மட்டத்தில் இருந்து 17,600 அடி உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய யோகாசன முகாமில் பலர் பங்கேற்றனர்.
காத்மாண்டு:

உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.



இந்நிலையில், ஐந்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடல்மட்டத்தில் இருந்து 17,600 அடி உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் நுழைவாயிலில் மாபெரும் யோகாசன முகாமுக்கு நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

நேபாளத்துக்கான இந்திய உயர்தூதர் மஞ்சீவ் சிங் புரி தலைமையில் இன்று நடைபெற்ற இந்த முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
Tags:    

Similar News