செய்திகள்

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பு - மைக் பாம்பியோ

Published On 2019-06-14 02:25 GMT   |   Update On 2019-06-14 02:25 GMT
ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.
வாஷிங்டன்:

ஓமன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நார்வேக்கு சொந்தமான பிராண்ட் ஆல்டேர் டேங்கர் கப்பலில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என நார்வே கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 
இந்த தாக்குதலை தொடர்ந்து இரண்டு கப்பல்களிலும் இருந்த ஊழியர்கள் மற்றும் குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதலில் தாக்குதலில் சிக்கிய நார்வேக்கு சொந்தமான பிராண்ட் ஆல்டேர் கப்பல் கடலில் மூழ்கியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



இந்த தாக்குதலை அடுத்து உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது.

இந்நிலையில், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் நாட்டு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News