செய்திகள்

டிரம்ப், பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் இல்லை - ஈரான் தலைவர் சொல்கிறார்

Published On 2019-06-13 19:40 GMT   |   Update On 2019-06-13 19:40 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் இல்லை என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான்:

ஈரான்-அமெரிக்கா இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்து உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

இந்த நிலையில் ஈரான்-அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாண இருநாடுகளுக்கு இடையே சமரசம் செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளது.

இதற்காக ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஜோ அபே 3 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். நேற்று அவர் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானியை சந்தித்தார்.

அதன் பின்னர் இருவரும், ஈரானில் உச்ச அதிகாரம் படைத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமேனியை சந்தித்து பேசினர். அப்போது, அவரிடம் ஈரான்-அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்புவதாக ‌ஷின்ஜோ அபே கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அயத்துல்லா அலி காமேனி, டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு தகுதியானவர் இல்லை என கூறினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘டிரம்ப், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தகுதியானவர் என நான் கூறமாட்டேன். என்னிடம் அவருக்கு பதில் இல்லை. நான் அவருக்கு பதில் அளிக்க மாட்டேன்’’ என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News