செய்திகள்

பப்ஜி கேமுக்காக நண்பர் கொலை - வைரல் பதிவின் உண்மை பின்னணி

Published On 2019-06-13 09:38 GMT   |   Update On 2019-06-13 09:38 GMT
பப்ஜி மொபைல் கேமில் 6x ஸ்கோப் தராததால் நண்பரை கொலை செய்ததாக வைரலாகும் பதிவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



சமூக வலைதளங்களில் பப்ஜி கேமால் நண்பரை கொலை செய்த நபர் என்ற தலைப்பில் புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது. அந்த பதிவின் புகைப்படத்தில் இருப்பவர் பப்ஜி கேமில் தனக்கு 6x ஸ்கோப் தராததால், நண்பரை கொலை செய்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.



கூகுளில் இந்த புகைப்படத்தை தேடும் போது, சைனா டெய்லி எனும் வலைதளத்தில் செப்டம்பர் 27, 2018 ஆம் தேதியிட்ட செய்தி காணக் கிடைத்தது. அதில் தற்சமயம் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது 28 வயதான சௌ ஸீவி என்பதும், இவர் 2018ம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி ஒன்பது பள்ளி மாணவர்களை கொலை செய்திருக்கிறார்.



வைரலாகும் புகைப்படம் ஜூலை 10, 2018 அன்று தேதி சீனாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் யுலின் நகர நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டதாகும். அந்த வகையில் புகைப்படத்தில் இருப்பது பள்ளி மாணவர்களை கொலை செய்த குற்றவாளி ஆவார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் பதிவு முற்றிலும் பொய்யானதாகும். பப்ஜி கேமில் 6x ஸ்கோப் தராததால், இவர் தனது நண்பரை கொலை செய்யவில்லை.

போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.
Tags:    

Similar News