பப்ஜி விளையாடியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த 14வயது சிறுவன், தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பப்ஜி விளையாடியதை தட்டிக்கேட்டதால் குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன்
பதிவு: ஜனவரி 29, 2022 01:32 IST
பப்ஜி
லாகூர்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வருகிறான். சிறுவனின் தாயார் 45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக், விவாகரத்து பெற்றவர்.
இந்நிலையில், தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் கடந்த வாரம் நஹித் முபாரக், அவரது மகன் தைமூர் மற்றும் இரு மகள்களுடன் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவரது மகன்தான் கொலையாளி என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணையில், பப்ஜி விளையாடியதைத் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என தெரிவித்தார்.
உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...பாக்தாத் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்
Related Tags :