மக்களிடையே மதத்தின் அடிப்படையில் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையில் வினோஜ் பி. செல்வம் டுவிட்டரில் கருத்து பதிவிட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பா.ஜனதா மாநில இளைஞர் அணி தலைவராக இருக்கும் வினோஜ் பி.செல்வம் மீது கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.
வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பதிவில், மக்களிடையே மதத்தின் அடிப்படையில் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து வினோஜ் பி.செல்வம் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற கருத்துக்களை சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றில் வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.