தன்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும்படி கனிமொழி சோமு கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி சோமுவுக்கு கொரோனா பாதிப்பு
பதிவு: ஜனவரி 27, 2022 19:07 IST
கனிமொழி சோமு
சென்னை:
திமுக மருத்துவர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் அதிக உடல் வலி இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனாவுக்கான சிகிச்சை முறைகளை பின்பற்றி வருகிறார். மேலும், சமீபத்தில் தன்னை சந்தித்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிககையில், ‘கடுமையான உடல் வலியும் காய்ச்சலும் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. என்னை என் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னை சந்தித்த அனைவரும் தயவுசெய்து தங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’என குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :