சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து இரண்டாவது முறையாக கைப்பறியுள்ளார்.
சையது மோடி பேட்மிண்டன் - சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
பதிவு: ஜனவரி 23, 2022 15:52 IST
பி.வி.சிந்து
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சக வீராங்கனை மால்விகா பன்சோத்துடன் மோதினார்.
இந்த இறுதிப்போட்டியின் முதல் செட்டில் 21-13 என்ற புள்ளிக்கணக்கில் சிந்து வென்றார். 2வது செட்டிலும் சிந்து 21-16 என கைப்பற்றினார்.
இறுதியில் பி.வி.சிந்து 21-13, 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையும் படியுங்கள்...கர்நாடகாவில் முதல் டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது - சுகாதார மந்திரி பெருமிதம்
Related Tags :