கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முதலில் அறிவிக்கப்பட்டபடி ஆறு இடங்களுக்குப் பதிலாக இரண்டு இடங்களில் மட்டும் போட்டிகளை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள் நடைபெறும் இடம் மாற்றம் - பிசிசிஐ அறிவிப்பு
பதிவு: ஜனவரி 23, 2022 05:19 IST
பி.சி.சி.ஐ., அகமதாபாத் கிரிக்கெட் மைதானம்
புதுடெல்லி :
வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் பல டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பாதுகாப்பு நடவடிக்கையாக, முதலில் அறிவிக்கப்பட்டபடி தொடரை ஆறு இடங்களுக்குப் பதிலாக இரண்டு இடங்களில் மட்டுமே நடத்துவது என்று முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
இதில் மூன்று ஒருநாள் போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், மூன்று டி20 போட்டிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டனிலும் நடைபெறும். அடுத்த மாதம் 6ந் தேதி முதல் 20 ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
Related Tags :