தியாலா மாகாணம், பாகுபாவின் வடக்கே அல்-அசிம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்
பதிவு: ஜனவரி 21, 2022 13:44 IST
மாற்றம்: ஜனவரி 21, 2022 14:07 IST
முகாமில் ராணுவ வீரர்கள்
பாக்தாத்:
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே மலைப் பகுதியில் உள்ள முகாமில் ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில், 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தியாலா மாகாணம், பாகுபாவின் வடக்கே அல்-அசிம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாக்தாத்திற்கு வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் நடந்த இந்த கொடூரமான தாக்குதல், சமீபத்திய மாதங்களில் ஈராக் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் ஆகும்.
Related Tags :