செய்த தவறுகளுக்கு கண்ணீர் விடும்படி அகிலேஷ் யாதவிடம் கிருஷ்ணர் கூறியிருப்பார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
கிருஷ்ணர் கனவில் வந்து சபித்திருப்பார்- அகிலேஷ் யாதவிற்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யநாத்
பதிவு: ஜனவரி 04, 2022 18:02 IST
அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத்
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி தான் அமையப்போகிறது என பகவான் கிருஷ்ணர் தனது கனவில் தினமும் வந்து கூறுவதாக அகிலேஷ் யாதவ் இன்று காலை தெரிவித்தார். மேலும் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் உத்தரப் பிரதேசத்தை தோல்வி அடைய வைத்துவிட்டதாக குற்றம்சாட்டியதாகவும் கூறினார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
சிலர் பகவான் கிருஷ்ணனை தினமும் கனவில் பார்க்கின்றனர். அவர் கனவில் வந்து இப்போதாவது செய்த தவறுகளுக்காக கண்ணீர் விடும்படி கேட்டிருப்பார். அதிகாரத்தில் இருந்தும் மதுராவிற்கும், பிருந்தாவனுக்கும் எதுவும் செய்யவில்லை என்று கிருஷ்ணர் சாபம் கொடுத்திருப்பார்.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் பதில் அளித்துள்ளார்.
Related Tags :