மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக வாக்காளர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக 5,794 ஒட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக வாக்காளர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மண்டலங்களிலும் உள்ள ஆண், பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருவொற்றியூர் மண்டலத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 607 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 609 பேரும், பெண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 871 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 127 பேரும் உள்ளனர். அங்கு 279 வாக்குச்சாவடிகள் உள்ளன.
மணலி மண்டலத்தில் 97 ஆயிரத்து 293 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். 48,543 ஆண் வாக்காளர்களும், 48,722 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 28 பேரும் உள்ளனர். வாக்குச்சாவடிகள் 97.
மாதவரம் மண்டலத்தில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 917 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 98,594, பெண் வாக்காளர்கள் 98,285, மூன்றாம் பாலினம் 38, வாக்குச்சாவடிகள் 191.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 6 லட்சத்து 6 ஆயிரத்து 857 மொத்த வாக்காளர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2,95,561, பெண் வாக்காளர்கள் 3,11,118, மூன்றாம் பாலினம் 178, வாக்குச்சாவடிகள் 572.
ராயபுரம் மண்டலத்தில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 101 மொத்த வாக்காளர்கள். ஆண் வாக்காளர்கள் 2,32, 611, பெண் வாக்காளர்கள் 2,29,358, மூன்றாம் பாலினம் 132, வாக்குச்சாவடிகள் 454.
திரு.வி.க.நகர் மண்டலத்தில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 68 மொத்த வாக்காளர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2,74,255, பெண் வாக்காளர்கள் 2,88,678, மூன்றாம் பாலினம் 135, வாக்குச்சாவடிகள் 505.
அம்பத்தூர் மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 4 லட்சத்து 39 ஆயிரத்து 240. இதில் ஆண் வாக்காளர்கள் 2,19,308, பெண் வாக்காளர்கள் 2,19,826, மூன்றாம் பாலினம் 106, வாக்குச்சாவடிகள் 435.
அண்ணாநகர் மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 6 லட்சத்து 8 ஆயிரத்து 63. இதில் ஆண் வாக்காளர்கள் 2,98,056, பெண் வாக்காளர்கள் 3,09,836, மூன்றாம் பாலினம் 171, வாக்குச்சாவடிகள் 570.
தேனாம்பேட்டை மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 6 லட்சத்து 36 ஆயிரத்து 319. இதில் ஆண் வாக்காளர்கள் 3,10,196, பெண் வாக்காளர்கள் 3,25,977, மூன்றாம் பாலினம் 146, வாக்குச்சாவடி 622.
கோடம்பாக்கம் மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 6 லட்சத்து 62 ஆயிரத்து 910. இதில் ஆண் வாக்காளர்கள் 3,27,997, பெண் வாக்காளர்கள் 3,34,727, மூன்றாம் பாலினம் 186, வாக்குச்சாவடிகள் 616.
வளசரவாக்கம் மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 3 லட்சத்து 32 ஆயிரத்து 111. இதில் ஆண் வாக்காளர்கள் 1,67,583, பெண் வாக்காளர்கள் 1,64,428, மூன்றாம் பாலினம் 100, வாக்குச்சாவடிகள் 308.
ஆலந்தூர் மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 971. இதில் ஆண் வாக்காளர்கள் 1,11,993, பெண் வாக்காளர்கள் 1,13,955, மூன்றாம் பாலினம் 23, வாக்குச்சாவடிகள் 199.
அடையாறு மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 5 லட்சத்து 14 ஆயிரத்து 806. இதில் ஆண் வாக்காளர்கள் 2,53,586, பெண் வாக்காளர்கள் 2,61,095, மூன்றாம் பாலினம் 125, வாக்குச்சாவடிகள் 466.
பெருங்குடி மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 2. இதில் ஆண் வாக்காளர்கள் 1,51,079, பெண் வாக்காளர்கள் 1,16,892, மூன்றாம் பாலினம் 31, வாக்குச்சாவடிகள் 271.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 11 ஆயிரத்து 469. இதில் ஆண் வாக்காளர்கள் 1,04,832, பெண் வாக்காளர்கள் 1,06,587, மூன்றாம் பாலினம் 50, வாக்குச்சாவடிகள் 209.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 1,576 மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட் டுள்ளது.
இதையும் படியுங்கள்... கேரளாவில் 21-ந் தேதி முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்