சென்னையில் குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்க்கு அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
தனது இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
பதிவு: நவம்பர் 23, 2021 21:41 IST
கோப்புப்படம்
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பெண் மம்தா. தனது கணவன் மது அருந்தி விட்டு தகராறு செய்ததால் மனமுடைந்து தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மம்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் மம்தாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
Related Tags :