தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தபின், சின்னத்துடன் கட்சி தொடங்கப்படும் என பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
நான் தனிக்கட்சி தொடங்குவேன்: அமரிந்தர் சிங்
பதிவு: அக்டோபர் 27, 2021 14:11 IST
அமரிந்தர் சிங்
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரிந்தர் சிங். இவருக்கும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சித்துவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் அமரிந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவேன். ஆனால், பா.ஜனதாவில் இணையமாட்டேன் எனத் தெரிவித்தார். இதற்கிடையில் அமரிந்தர் சிங் கட்சி தொடங்குவார் என மீடியா ஆலோசகர் ரவீன் தாகூர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சண்டிகார் சென்றிருந்த அமரிந்தர் சிங், புதிய கட்சி தொடங்குவேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்த உடன் கட்சி சின்னத்துடன் அறிவிப்பு வெளியாகும். என்னுடைய வழக்கறிஞர் இதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.
Related Tags :