டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 5-வது சர்வதேச வீர்ர விராட் கோலி ஆவார்.
டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் விராட் கோலி
பதிவு: செப்டம்பர் 27, 2021 02:16 IST
மாற்றம்: செப்டம்பர் 27, 2021 02:27 IST
விராட் கோலி
துபாய்:
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பெங்களூர் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. மும்பை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 51 ரன் விளாசினார்.
இவர் தனது 13-வது ரன்னை கடந்த போது டி20 அரங்கில் 10 ஆயிரம் ரன்னை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது சர்வதேச வீரரானார். இதுவரை 314 போட்டியில் 5 சதம், 74 அரைசதம் உள்பட 10,038 ரன்கள் எடுத்துள்ளார்.
ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (14,275 ரன்), பொல்லார்டு (11,195 ரன்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10,808 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10,019 ரன்) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இதையும் படியுங்கள்...ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் - மும்பை இந்தியன்சை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்.சி.பி.
Related Tags :