கடந்த சில மாதங்களாக வேறு கட்சிகளில் அதிருப்தியில் இருந்தவர்கள் பா.ஜனதாவுக்கு இழுக்கப்பட்டனர். அவ்வாறு இணைந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் கட்சி பதவி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்பது போன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதி எண்ணிக்கை குறைந்ததால் பா.ஜனதா போட்டியிட விரும்பும் தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பதவிச் சண்டையும் கட்சிக்குள் தலைதூக்கி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக வேறு கட்சிகளில் அதிருப்தியில் இருந்தவர்கள் பா.ஜனதாவுக்கு இழுக்கப்பட்டனர்.
அவ்வாறு இணைந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் கட்சி பதவி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்பது போன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி கட்சியில் இணைந்த பிரபலங்கள் பலர் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், கவுதமி மற்றும் டாக்டர் காயத்ரிதேவி, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கரு. நாகராஜன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், பெப்சி சிவா, தீனா, நடிகர் ராதாரவி, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பால்கனக ராஜ், தணிகைவேல், ஏழுமலை, வி.ஐ.டி. கலிவரதன், கு.க.செல்வம் உள்பட பலர் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.
இவர்களில் குஷ்பு, நயினார்நாகேந்திரன், அண்ணாமலை, கு.க.செல்வம், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கும், வாய்ப்புகள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மனதளவில் சோர்ந்து போவார்கள் என்று மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
‘சீட்’ வழங்கும்போது அவர்களுடைய கொள்கை பிடிப்பு, எந்த அளவுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் என்பதை தீர ஆராய்ந்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.