டெல்லியில் இன்று புதிதாக 256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இதுதான் அதிகபட்ச பதிவாகும்.
டெல்லியில் இன்று புதிதாக 256 பேருக்கு கொரோனா: பிப்ரவரி மாதத்தில் அதிகம்
பதிவு: பிப்ரவரி 26, 2021 20:09
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கல் குறைந்து வந்த நிலையில், தற்போது உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 200 பேர் கொரோனா தொற்றால் பாதித்திருந்த நிலையில், நேற்று அது 220 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 9-ந்தேதி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக உயிர்ச்சேதம் இல்லாமல் இருந்தது. அதன்பின் 13-ந்தேதியும், 17-ந்தேதியும் உயிர்ச்சேதம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் இதுவரை 6,38,849 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,169 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :