இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
இங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு
பதிவு: ஜனவரி 27, 2021 16:55
சிகிச்சை குறித்து விளக்கும் டாக்டர்
லண்டன்:
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 36,89,746 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 16.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
Related Tags :